“எழுதப்படிக்கத் தெரியாத நபி” என்று முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து இறைவன் கூறும் வசனம் எது?
Jul 21st, 2008 by Jafar Ali
கேள்வி எண்: 89. “எழுதப்படிக்கத் தெரியாத நபி” என்று முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து இறைவன் கூறும் வசனம் எது? மேலும்..
இஸ்லாமிய படிப்பகம்
Jul 21st, 2008 by Jafar Ali
கேள்வி எண்: 89. “எழுதப்படிக்கத் தெரியாத நபி” என்று முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து இறைவன் கூறும் வசனம் எது? மேலும்..
Jul 19th, 2008 by Jafar Ali
ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையை வரையறுக்கும் வரைச்சட்டங்களே இந்த ஐந்து தூண்கள்! இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு (மூலம் நலிந்தோர் மீதான அக்கரை), ஜகாத் (மூலம் பொருளாதார தூய்மை), வசதி படைத்தோர் மக்கா மாநகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவையே அந்த வரைச்சட்டங்கள்!
1. இறைநம்பிக்கை
லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ்!
அல்லாஹ் (எனும்) ஏக இறைனைத் தவிர
வேறு இறைவன் இல்லை!
முஹம்மத் (ஸல்) அவர்கள்
அவனுடைய (இறுதித்)தூதர் ஆவார்கள்.
இறைநம்பிக்கையின் அடிப்படை அம்சமான இந்த பிரகடனம் “ஷஹாதத்” எனப்படுகின்றது. இறைநம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் பூரண நம்பிக்கையுடன் மொழியும் ஒரு கொள்கைப் பிரமாணமே அது! இந்த கொள்கைப் பிரகடனத்தின் முதல் பகுதியான லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதைக் கவனியுங்கள். மேலும்..
Jul 8th, 2008 by Jafar Ali
சில உதாரணங்கள்
மற்றவரிடம் கருணை காட்டாதவர்கள் மீது இறைவனும் தன் கருணையைப் பொழிவதில்லை!
தான் விரும்புவதையே தன்னுடைய சகோதரருக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது!
அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தான் மட்டும் வயிறார உண்பவன் இறைநம்பிக்கையாளன் அல்ல!
பிறரை(த் தாக்கி) கீழே வீழ்த்தி விடுபவன் வலிமையாளன் அல்லன். (மாறாக) கோபம் வரும்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே (உண்மையான) வலிமையாளன்!
இறைவன் உங்களுடைய உடலமைப்பையும், தோற்றத்தையும் கொண்டு உங்களைக் கணிப்பதில்லை. மாறாக, அவன் உங்களுடைய உள்ளத்தையும், செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான்!
ஒரு மனிதன் தாகத்தால் தவித்த நாய் ஒன்றுக்கு பருக தண்ணீர் வழங்கினான். (அவனுடைய இந்த செயலுக்குப் பகரமாக) இறைவன் அவனது பாவங்களை மன்னித்தான். (அப்போது) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: இறைத்தூதரே! விலங்குகளிடத்தில் கருணைக் காட்டினாலுமா எங்களுக்கு வெகுமதி கிடைக்கும்? முஹம்மத் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஒவ்வொரு உயிர்களிடத்திலும் காட்டப்படும் கருணைக்கு வெகுமதி உண்டு! (அந்த உயிரினம் ஒரு மனிதனாயினும் சரி அல்லது ஒரு விலங்காயினும் சரியே)!
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் - தமிழ் பிரிவு
குவைத்.
Jul 6th, 2008 by Jafar Ali
கேள்வி எண்: 88. யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும்போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக. மேலும்..
Jul 4th, 2008 by Jafar Ali
இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். (21:51)
அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது (21:52)
அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (21:53)
(அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையவரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் என்று கூறினர். (21:54) மேலும்..